அரசு பேருந்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி.. பெண் நடத்துநரின் உதவியுடன் பிறந்த குழந்தை.. பயணிகள் நெகிழ்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan8 July 2024, 10:50 am
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த முஷிராபாத்தை கர்ப்பிணி பெண் ஸ்வேதா ரத்தினம் அரசு பஸ்சில் பகதூர்புரா செல்ல ஏறினார்.
பஸ்சில் செல்லும்போது திடிரென ஸ்வேதாவிற்கு பிரசவவலி ஏற்பட்டு துடித்தார் இதனால் அந்த பஸ்சில் இருந்த டிரைவர் எம்.அலி பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.
பின்னர் பயணிகளை கீழே இறக்கிவிட்டு பெண் கண்டக்டர் பி.சரோஜா சக பெண் பயணிகளுடன் இணைந்து பஸ்சிலேயே பிரசவம் பார்த்ததில் ஸ்வேதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது தாய், குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து தகவல அறிந்த போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஜ்ஜனார் ஆகியோர் பெண் கண்டக்டருக்கும் , டிரைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தெலங்கானா அரசு பஸ்சில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணத்திற்கு பஸ் பாஸ் வழங்கப்படும் என டி.ஜி.ஆர்.டி.சி அறிவித்து வழங்கினர்.
0
0