ஏஆர் ரகுமான் இசைநிகழ்ச்சி குளறுபடிக்கு காரணம் நானா? மறுத்த விஜய் ஆண்டனி : சிக்கிய யூடியூப் சேனல்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2023, 10:01 pm

ஏஆர் ரகுமான் இசைநிகழ்ச்சி குளறுபடிக்கு காரணம் நானா? மறுத்த விஜய் ஆண்டனி : சிக்கிய பிரபல யூடியூப் சேனல்!!

‘மறக்குமா நெஞ்சம்’ என்கிற பெயரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், செப்டம்பர் 10-ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில், நிகழ்ச்சி நிர்வாகம் போதிய வசதிகளை செய்யாததால், கூட்ட நெரிசல் காரணமாக கூட்டம் நிரம்பி வழிந்தது. இதற்கு காரணம் ஏ.ஆர்.ரகுமான் என பலர் குற்றம்சாட்டிய நிலையில், இதற்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கு சம்மந்தம் இல்லை என்றும்… இதற்க்கு பொறுப்பு, நாங்கள் தான் என இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனம் பொறுப்பு ஏற்றுக்கொண்டது.

மேலும் இதற்கான பின்னணி குறித்து, விலாவாரியாக விசாரித்ததாக… ஸ்ட்ரிங் ஆபரேஷன் மூலம் சில யூடியூபர், தொகுப்பாளர்கள், போன்ற சிலரது முகத்திரையை கிழிந்த ஊடகம், இந்த இசை நிகழ்ச்சிக்கான பின்னணி என பல விவரங்களை வெளிப்படுத்துவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அதில் இந்த இசை நிகழ்ச்சியில் குளறுபடிகள் நடக்க காரணம், பாஜக தலைவர் அண்ணாமலை என்றும், இதில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு தொடர்பு இருப்பதாக சம்மந்த படுத்தி பேசி இருந்தார்.

அதாவது ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து ‘என் மண் என் மக்கள்’, நிகழ்ச்சிக்காக பாடல் ஒன்றை இசையமைத்து தர மறுப்பு தெரிவித்தது தான் இதற்கான மூல காரணம் என்பது போல் கூறப்பட்டிருந்தது.

எனவே அவருடைய இசை நிகழ்ச்சியை கெடுப்பதற்காக சுமார் 30,000 டிக்கெட்டுகள் அதிகமாக அச்சிடப்பட்டு இப்படிப்பட்ட சூழலை ஏற்படுத்தியதாகவும் அந்த பெண்மணி தெரிவித்திருந்தார்.

மேலும் விஜய் ஆண்டனியும் ஆன்டி பிகிலி போன்ற வார்த்தைகளை பேசி கொண்டு மாடர்ன் சங்கியாக வலம் வந்து கொண்டிருப்பதாகவும், இவர் செய்தி துறையை சேர்ந்த ஒரு நண்பருக்கு, வாய்ஸ் மெசேஜ் மூலம், ‘பெருசு இப்போதா சிக்கி இருக்கு விடாதீங்க என’ கூறி வாய்ஸ் அனுப்பி இருந்ததாக அந்த வீடியோவில் பேசிய பெண்மணி கூறி இருந்தார்.

இதற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மறுப்பு தெரிவித்தது மட்டுமின்றி தன் மீது அவதூறு பரப்பியுள்ள, அந்த தனியார் ஊடகத்தின் மீது மணநஷ்டஈடு வழக்கு தொடர்த்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது… என் மீது அன்பு கொண்ட என் அன்பு மக்களுக்கு வணக்கம்… “நான் இப்போது ஒரு சிறு மனவேதனையுடன் இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

ஒரு சகோதரி youtube சேனல் ஒன்றில் என்னையும், சகோதரர் ஏ ஆர் ரகுமான் அவர்களையும் தொடர்பு படுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யே!!

அந்த youtube சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன் என விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்துள்ளார்.

அதே போல் வாயை விட்டு, இந்த பிரச்சனையில் சிக்கியுள்ளது அந்த யூடியூப் சேனல். அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • Sivakarthikeyan Insulted Actor Dhanush goes controversy சம்பளம் பாக்கி வைத்தாரா தனுஷ்? காசு விஷயத்தில் காயப்படுத்திய எஸ்கே… பகீர் சம்பவம்!