இந்து மதம் குறித்து ஆ.ராசா சர்ச்சை … கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் சைகை காட்டி நழுவிய அமைச்சர் சேகர்பாபு : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2022, 9:37 pm

இந்து மதம் குறித்து ஆ ராசா சர்ச்சை பேச்சு பேசியது பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் காது கேட்கவில்லை என கையெடுத்து கும்பிட்டு நழுவிய அமைச்சரின் செயல் வைரலாகி வருகிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசினர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற திமுக எம்பி தயாநிதி மாறன், முன்னேறுகின்ற மாநிலங்களில் குறிப்பான மாநிலம் தமிழ்நாடு தான். இல்லாதவர்களுக்கு இல்லை என்ற சொல் இருக்கக் கூடாது. ஏழை மக்களை வாழ்வை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

தமிழ்நாட்டைப் பார்த்து தான் ஒன்றிய அரசு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது. இலவசம் வேண்டாம் என்பவர்கள் வசதி படைத்தவர்களாக உள்ளார்கள். முன்னேறாத மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

முன்னேறும் மாநிலமாக முதல் தரவரிசையில் இருக்கும் தமிழ்நாடு தொடர்ந்து இலவசங்களை வழங்கி திராவிட மாடல் ஆட்சிக்கு உதாரணமாக இருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பணி காலத்தில் தான் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் புரிந்தார்கள் அதற்கான பயனைத்தான் தற்போது அனுபவிக்கிறார்கள்.

ஆ ராசா இந்துக்கள் தொடர்பாக பேசியதற்கு அமைச்சர் சேகர்பாவிடம் கருத்து கேட்டபோது இரண்டு முறை கேள்வி கேட்கப்பட்டும் கேள்வியே தன் காதில் விழவில்லை என சைகையால் காண்பித்து, கைகூப்பி வணங்கி செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!