ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, இருக்கும் போது ஆணவத்துடன் ஒரு பேச்சு : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2023, 7:24 pm

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அறிவார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்க தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்து வரும் ஆசிரியர் பணி என்பது அறம் சார் பணி,

அச்சிறப்பான பணியில் பெரும் பங்காற்றுபவர்களான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜனநாயக முறையில் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் போராட்டங்களை இந்த அரசு முடக்கக்கூடாது.

ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஆணவத்துடன் ஒரு பேச்சு எனும் இரட்டை நிலைப்பாட்டை கைவிட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களே தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பை அழைத்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், ஆசிரியர்களின் நலன் காக்கும் அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் துணை நிற்கும் எனவும் உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 340

    0

    0