தொகுதிக்கு ஒரு சிலை… கலைஞரின் 8 அடி முழு உருவச் சிலை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2024, 10:49 am

தொகுதிக்கு ஒரு சிலை… கலைஞரின் 8 அடி முழு உருவச் சிலை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள டிவிஎஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள கலைஞர் திருவுருவ சிலையை தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலைஞர் உருவ சிலையை திறந்து வைத்து வாழ்த்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், அப்துல்சமது,
மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன், துணை மேயர் திவ்யா,
கவிஞர் சல்மா,கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்