போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திருப்பம்… பிரபல தமிழ் நடிகையின் சகோதரர் கைது.. திரையுலகம் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2024, 9:57 am

சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையின் சகோதரர் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநில போதை பொருள் தடுப்பு தனிப்படை போலீசார் மற்றும் ராஜேந்திரநகர் போலீசார் இணைந்து சைபராபாத் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த ஐந்து நைஜீரியர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபல திரைப்பட நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங், ஆங்கித் ரெட்டி, பிரசாத், மதுசூதன், நிகில் தாவன் ஆகிய 5 பேரை போலீசார் பிடித்து அவர்களின் சிறுநீர் பரிசோதனை செய்ததில் போதை மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ₹33 கோடி மதிப்புள்ள 199 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ