சாகாவரம் கொண்ட படைத்தலைவன் : தோனி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 3:28 pm
Dhoni
Quick Share

சாகாவரம் கொண்ட படைத்தலைவன் : தோனி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்திய பெங்களூரு அணி ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

சென்னை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. சென்னை அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இது 3-வது முறையாகும்.

இந்த நிலையில் தோனி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் தனது எக்ஸ் தளப்பதிவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், தோல்வியின் விளிம்பில் அணி இருக்கையில் வந்த தோனியை பார்த்தவுடன் இதுதான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தினேன்!

மேலும் படிக்க: பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கெஜ்ரிவால்.. தடுத்து நிறுத்திய போலீஸ்..!!

ஆனால் விக்கெட் ஆவதற்கு முன்பு ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன் இவருக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன்!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! நன்றி தோனி! என பதிவிட்டுள்ளார்.

Views: - 174

0

0