கனடாவில் வேலை: லக்சுரி லைஃப்: மயக்க மருந்து கொடுத்து குடும்பத்திற்கு கல்தா கொடுத்த மாப்பிள்ளை…!!

Author: Sudha
15 August 2024, 3:53 pm

பஞ்சாப் மாநில லூதியானாவில் ஆடைகள் தயாரிக்கும் `பொட்டிக்’ நடத்தி வரும் 41 வயது பெண்ணுக்கு திருமணமாகி விவாகரத்தாகி விட்டது.அவருக்கு 17 வயதில் மகனும், 13 வயதில் மகளும் இருக்கின்றனர். அப்பெண் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்து மேட்ரிமோனியல் தளத்தில் தனது பெயரை பதிவு செய்து வைத்திருந்தார்.

அவரை மொஹித் சத்தா என்பவர் தொடர்பு கொண்டு பேசினார். இருவரும் அடிக்கடி சாட்டிங் செய்து கொண்டனர். மொஹித் தான் கனடாவில் வசிப்பதாகவும், அங்கு தொழில் செய்வதாகவும் குறிப்பிட்டார். கனடாவில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் அதற்காக தான் இந்தியா வந்திருப்பதாகவும் மொஹித் குறிப்பிட்டார். மேலும் தான் மும்பையில் இருப்பதாகவும், ஆகஸ்ட் 25ம் தேதி கனடா செல்வதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து 41 வயது பெண் கூறுகையில்,” நாங்கள் மொத்தம் 9 பேர் கடந்த 7-ம் தேதி மொஹித்தை சந்திக்க மும்பை சென்றோம். பண்ணை வீடு ஒன்றை எங்களுக்காக புக்கிங் செய்திருந்தார். எங்களிடம் மொஹித் மிகவும் கவர்ச்சிகரமாக பேசினார்.அதோடு எங்களை மிகவும் கவனம் எடுத்து கவனித்துக் கொண்டார்.

கனடாவில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும் என்று குறிப்பிட்டு இருந்தார். நாங்கள் அனைவரும் ஒரு அறையில் கூடியிருந்தோம். எங்களுக்கு மொஹித் ஜூஸ் கொடுத்தார். நாங்கள் அதை குடித்தோம். கனடாவில் இருந்து போன் வந்தால் இடையூறு இருக்கக்கூடாது என்று கூறி எங்களின் போன்களை வாங்கி வைத்துக்கொண்டார். பிறகு எங்களுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்தார்.

குடித்தவுடன் மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அனைவரும் தூங்கி விட்டோம்.எழுந்து பார்க்கும் போது அவரை காணவில்லை.தொடர்பு கொள்ளவும் இயலவில்லை.என் அக்கவுண்டில் இருந்து 12 லட்சம் பணம் மற்றும் எங்கள் அனைவரின் செல்போன் ஆகியவை காணாமல் போனது பிறகு போலீசில் புகார் அளித்தோம் என்றார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் கூறுகையில், ”விசாரித்துக்கொண்டிருக்கிறோம். எந்தெந்த பிரிவுகளில் புகாரை பதிவு செய்யலாம் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். இது போன்ற சம்பவங்களில் மக்கள் சம்பந்தப்பட்ட நபர் குறித்து முழுமையாக விசாரித்து எந்த வித பரிவர்த்தனைகளையும் வைத்துக்கொள்ளவேண்டும்”குறிப்பாக பெண்கள் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!