ஆடிப் பெருக்கு வரப்போகுது: ஆனால் ஆற்றில் இறங்க வேண்டாம்; இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை..!!
Author: Sudha1 August 2024, 9:26 am
காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றில் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு அ.தி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் திருக்கோவில், காங்கேயம்பாளையம் அருள்மிகு நட்டாட்ரீஸ்வரர் திருக்கோவில், நஞ்சைகாளமங்கலம் அருள்மிகு மத்தியபுரீஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் அருள்மிகு குலவிளக்கு அம்மன் திருக்கோவில் மற்றும் காவிரி ஆற்றங்கரையில் உள்ள சிறிய திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.