ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு… இனி டீ, காபி விலை உயருகிறது?

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2023, 9:57 am

5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 10 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 210க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ. 10 அதிகரித்து ரூ. 220க்கு விற்பனையாகிறது.

ஆவின் பால் விலை உயர்வால் டீக்கடை, உணவகங்களில் டீ மற்றும் காபி போன்றவற்றின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. பிங்க் நிறத்தில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றவும் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!