பெங்களூரு: விஜயநகர மாவட்டத்தில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே ஹோஸபேட்டே தாலூகாவின் மாரியம்மன ஹள்ளியின் கிராமத்தை சேர்ந்த வெங்கட் பிரஷாந்த் (42), இவருடைய மனைவி சந்திரகலா (38) , மற்றும் இவர்களின் மகன் எஸ் ஏ அர்த்விக் (16) மற்றும் மகள் ப்ரேரனா (8) ஆகியோர் ராகவேந்திரா ஷெட்டி என்பவரின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை அளவில் திடீரென ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு மற்றும் ஏசி வெடித்ததில் வீடு முழுக்க தீ பற்றிக்கொண்டு கரும் புகை சூழ்ந்தது. இந்த தீயை கண்டவுடன் ராகவேந்திரா ஷெட்டி மற்றும் அவருடைய மனைவி ராஜஸ்ரீ இருவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
ஆனால் வெங்கட் பிரஷாந்த் மற்றும் அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி உயிருடன் எறிந்தது நெஞ்சை பதற வைத்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு ஊழியர்கள் தீயை அணைத்தனர்.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹோஸபேட்டே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குளிர்சாதனப்பெட்டி வெடித்ததால் விஷ வாயு கசிந்ததா அல்லது தீயால் ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி இறந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து நடந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த விபத்து குறித்து மரியம்மன ஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் "சர்தார் 2" திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…
திண்டுக்கல் தியேட்டரில் பரபரப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம்,தனது புதிய திரைப்படமான "வீர தீர சூரன்" வெளியானதை முன்னிட்டு,திண்டுக்கல்…
ஹீரோவாக நடிக்கிறார் VJ சித்து தற்போதைய சினிமா உலகில்யூடியூப் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பிரபலமானவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.அந்த…
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
This website uses cookies.