சிறுபான்மையினர் என்பதாலே என் மீது குற்றச்சாட்டு : விசாகா கமிட்டி அமையுங்க.. ஆசிரியை மீது நடவடிக்கை எடுங்க..ஜாகீர் உசேன் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 April 2022, 7:19 pm

தமிழக பரத நாட்டிய கலைஞரான ஜாகீர் உசேன், தமிழக கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இவர் கரூர் மாவட்ட இசை பள்ளிக்கு, ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியாற்றி வந்த இசைப்பள்ளியின் ஆசிரியைக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே, சிவகங்கை மாவட்ட இசை பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போது, பெண் ஆசிரியையிடம் அத்துமீறி ஜாகீர் உசேன் நடந்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில், மற்றொரு வன்கொடுமை புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, ஜாகீர் உசேன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு ஜாகீர் உசேன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இது சம்பந்தமாக கலை பண்பாட்டு இயக்ககத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கிறேன், பரதநாட்டிய ஆசிரியை திருமதி சுஜாதா என்பவர் அரசியல் தூண்டுதலின் பேரில் சில வெளி அமைப்புகளுடன் கைக்கோர்த்து என்னை கோன்ற சிறுபான்மையின்ர் மீது குற்றம் சுமத்துவதை முற்றிலும் மறுக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி உண்மையை அனைவருக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு என் மீது வீண்பழி சுமத்தி என் பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1310

    0

    0