சென்னை : திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமே இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நெல்லை – சுத்தமல்லியை அடுத்துள்ள பழவூர் கிராமத்தில் நடந்த கோவில் கொடை விழாவையொட்டி, பாதுகாப்பு பணியில் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பக்தர்களை வரவேற்று பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்ற காவல் துறையினர் முயன்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் உடனிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த காவலர் மார்கரெட் தெரசாவை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமே இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- திருநெல்வேலி, பழவூர் எஸ்ஐ மார்க்ரெட் தெரசா அவர்களை கயவர்கள் கழுத்தறுத்து கொல்ல முயற்சித்து இருக்கிறார்கள்.காவல்துறையினர் மீது கயவர்களுக்கு எந்தவிதமான பயமும் திமுக அரசில் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக இது காட்டுகிறது!. அவர் விரைந்து குணமடைய ஆண்டவனை வேண்டுகின்றேன், எனத் தெரிவித்துள்ளார்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.