உங்க மாநில முதல்வரிடம் இணக்கமா செயல்படுங்க.. பிறகு தமிழகத்துக்கு அட்வைஸ் பண்ணலாம் : தமிழிசைக்கு திமுக அமைச்சர் பதிலடி!!
Author: Udayachandran RadhaKrishnan20 November 2023, 6:28 pm
உங்க மாநில முதல்வரிடம் இணக்கமா செயல்படுங்க.. பிறகு தமிழகத்துக்கு அட்வைஸ் பண்ணலாம் : தமிழிசைக்கு திமுக அமைச்சர் பதிலடி!!
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரமனா மீதான வழக்கு விசாரனை தொடர அனுமதி அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்து உள்ளார்.
ஆளுநர் 13 ம் தேதி அனுமதி அளித்ததை அன்றே சொல்லி இருந்தால் நாங்கள் ஏன் கூட்டம் போட போகிறோம். தமிழக ஆளுநர் கடைசியாக அனுப்பப்பட்ட 5 மசோதக்களை நிறுத்தி வைத்துள்ளார்,பத்து மசோதாக்கள் திருப்பி அனுப்பி உள்ளார்.
தமிழசை சௌந்தர்ராஜன் தெலுங்கானவில் போய் அங்குள்ள முதல்வரோட இனக்கமாக போகட்டும், அதன் பின்பு தமிழகத்திற்கு அறிவுறை கூறட்டும்.
குட்கா வழக்கில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று சிபிஐக்கு நாங்கள் தகவல் தெரிவிப்போம் அதன் பின்பு அவர்கள் விசாரணை தொடங்குவார்கள்.
விசாரணை தொடங்குவதற்கு முன்பு ஆதாரங்களை அதிக அளவு திரட்டி வழக்கு இல்லாமல் வலுவாக போவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம், வலுவான ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் நிரூபிக்காவிட்டால் வழக்கு நீர்த்துப் போய்விடும் எனவே ஆதாரங்களை வலுவாக திரட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விவகாரத்தில் நாங்கள் முன்வைத்த காலை முன் வைக்க மாட்டோம் திமுக என்றுமே முன் வைத்த காலை பின் வைக்காதே. திமுகவைப் போல் ஒரு சகிப்புத்தன்மை கொண்ட கட்சி போல் வேறு எந்த கட்சியும் கிடையாது,
ஆளுநரின் நடவடிக்கைகளை பொறுத்துக் கொண்டு இருந்தும் சகித்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில்தான் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வேறு வழியின்றி வழக்கு தொடர்ந்தோம்.
மத்திய சிறைச்சாலைகளை ப்ரோன் மூலம் கண்காணிப்பதற்கு சிறைத்துறை தமிழக அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் உள்ளது சிறைகளை கண்காணிப்பது அரசின் கடமை ஆகையால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.