சௌமியா அன்புமணி எடுத்த அதிரடி முடிவு : முதலமைச்சர் வரை முறையிட திட்டம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2023, 9:47 pm

கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் “நொய்யலாறு” மீட்பிற்கான கருத்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில் பசுமை தாயகத்தின் தலைவரும், அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சவுமியா அன்புமணி கலந்து கொண்டு விவசாயிகள், தொழிற்துறையினர், சமூக, சுற்றுச்சூழல், வன ஆர்வலர்கள் மற்றும் குளங்கள் பாதுகாப்பு குழுக்களுடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சவுமியா அன்புமணி, கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பழமொழியை கூறி, நொய்யல் ஆற்றை மையபடுத்தி உழைத்து கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களையும் இணைத்து பசுமை தாயகம் சார்பில் ஒரு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்கிறோம் என்றார்.

இந்த நொய்யல் ஆற்றை காப்போம், நொய்யல் ஆற்றை மீட்பதற்காக நடத்தபட்ட கூட்டத்தில் நிறைய பேர் கலந்து கொண்டு ஆர்வமுடன் நிறைய கருத்துகளை எடுத்துக் கூறியிருப்பதாக தெரிவித்தார்.

நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தி மீட்க மாவட்ட வாரியகாவோ அல்லது தாலுக்கா வாரியாகவோ, ஒற்றுமையான ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

குறைந்த செயல்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றவர் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் ,மூன்றாம் கட்டம் என பல நிலைகளில் இப்பணிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என நினைப்பதாக தெரிவித்தார்.

நொய்யலாற்றை மீட்க பத்து லட்சம் கையெழுத்துடன் ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தலாம் என்ற முடிவு செய்யபட்டுள்ளதாக சவுமியா அன்புமணி கூறினார்.,

மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த குறைந்தபட்ச செயல்திட்டம் தயாரிப்பது குறித்து பேசிக்கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்த நொய்யலாறு பிரச்சனையை மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், முதலமைச்சர் வரை அவர்களது கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

நொய்யல் ஆற்றை மீட்க மாதம் ஒரு கூடி என்னென்ன செய்யலாம் என பேச யோசித்து வைத்திருப்பதாகவும், அரசியல் கட்சிகளில் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ஒன்றிணைந்து செயல்பட முயற்சி செய்து வருவதாக கூறினார்.

இன்று சமூக அமைப்புகள் மட்டும் தான் ஒன்றிணைந்திருக்கறோம் என்றும் விரைவில் அரசியல் கட்சிகளை சந்திப்போம் என்றார். தாங்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை நல்ல முறையில் முடித்து காட்டுவோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த கூட்டத்தை கூட்டி நொய்யல் ஆற்றை பற்றி விரிவாக விவாதித்திருப்பதாக தெரிவித்தார்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…