‘ஹலோ, நான் அஜித் பேசுறேன்’… விஜயகாந்த் குடும்பத்தினரிடம் கண்கலங்கி வருத்தம் … அஜர்பைஜானில் இருந்து வந்த திடீர் போன் கால்..!!

Author: Babu Lakshmanan
29 December 2023, 2:17 pm

விஜயகாந்த் மறைவுக்கு அவரது மனைவி பிரேமலதா, சுதீஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக நேற்று மதியம் அவரது உடல் வைக்கப்பட்டது. இரவு முழுவதும் விடிய விடிய விஜயகாந்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சாரைசாரையாக படையெடுத்து வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பின்னர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக இன்று அதிகாலை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடலுக்கு நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், பார்த்திபன், ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், சுந்தர்.சி, பாக்கியராஜ், சாந்தனு மற்றும் நடிகை குஷ்பூ, நளினி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஏராளமான திரைப்பிரபலங்கள் நேரில் வந்து விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் நிலையில், நடிகர் அஜித் வருவாரா..? என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஏனெனில், அஜர்பைஜானில் விடா முயற்சி சூட்டிங்கில் அவர் பங்கேற்றிருப்பதால், அங்கிருந்து வரும் வாய்ப்புகள் குறைவானது தான்.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு தொலைபேசி வாயிலாக அவரது மனைவி பிரேமலதா, சுதீஷை தொடர்பு கொண்டு நடிகர் அஜித் பேசியுள்ளார். அப்போது, விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்ட அவர், அஜர்பைஜானில் இருப்பதால் நேரில் வர முடியாததற்கு வருத்தத்தையும் கூறிக் கொண்டார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ