ராஜராஜ சோழனை மட்டுமா…? முருகனையே மாற்றி விட்டார்கள்… அது தான் ஆரியம் : நடிகர் கருணாஸ் கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
4 October 2022, 5:46 pm
Quick Share

சென்னை : ராஜ ராஜ சோழன் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், நடிகர் கருணாஸ் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கல்கியின் கற்பனை கதையில் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் -1 திரைப்படம் கடந்த 30ம் தேதி வெளியாகியது. இந்த திரைப்படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாகி 3 நாட்களிலேயே ரூ.200 கோடி வசூலையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

அதேவேளையில், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராஜராஜ சோழனுக்கு காவி உடை அணிந்து, அவரை இந்துவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் சர்ச்சையை கிளப்பினார். இதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கருணாஸ் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதாவது, ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும். அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்; அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக்கொண்டது.இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது.

ராஜ ராஜ சோழனை இந்து என்று மாற்றநினைப்பது மட்டுமா நடந்தது?; தமிழை சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்றார்கள்.சிந்துவெளி நாகரிகமான தமிழர் நாகரிகத்தில் இடம்பெற்ற காளையை,குதிரையாக திரித்தார்கள். முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள்; தஞ்சை பெரிய கோயிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள். எங்கெல்லாம், எதையெல்லாம் காவியாக்க முடியுமோ அதையெல்லாம் மாற்ற முற்படுவார்கள், எனக் கூறியுள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 414

    0

    0