நடிகை த்ரிஷா மீது வழக்கு போடுவேன்.. இன்னும் 4 மணி நேரம் தான் கெடு: பிளேட்டை மாற்றிய நடிகர் மன்சூர் அலிகான்…

Author: Babu Lakshmanan
21 November 2023, 11:13 am

நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை 4 மணி நேரத்தில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த டிஜிபிக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஊடகங்கள் முன்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது :- நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும். நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்பது தெரியும்.

பாஜகவை சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண்களைப் பற்றி மிகவும் அவதூறாக பேசினார். அது தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட போது எந்த மகளிர் சங்கமும் போராடவில்லை. நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை 4 மணி நேரத்தில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

என்னிடம் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். எல்லோரையும் உசுப்பேற்றி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜுக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது. நடிகை த்ரிஷா குறித்து தவறாக நான் எதுவும் பேசவில்லை, என தெரிவித்துள்ளார்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…
  • Close menu