‘ஜெயிலர்’ படத்த நீங்க கொண்டாடுங்க… 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை புறப்பட்டார் ரஜினி ; காரணம் ஏன் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
9 August 2023, 12:12 pm

ஜெயிலர் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. காவாலா, டைகர் ஹுக்கும் பாடல்கள் மற்றும ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு ஆகியவை படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் பெரிதும் தூண்டியுள்ளது.

இப்படியிருக்கையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டுச் சென்றார். காலை 8 மணியளவில் காரில் சென்னை விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டு சென்ற அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “ஜெயிலர்” படம் நன்றாக வந்துள்ளது. பார்த்து விட்டு கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, அண்ணாத்த படம் தொடங்குவதற்கு முன்பு கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று வந்தார். கொரோனா பரவல் மற்றும் தனது உடல்நிலை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடங்களுக்கு செல்வதை ரஜினி தவிர்த்து வந்தார். இந்த நிலையில், அவர் மீண்டும் இமய மலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரஜினிகாந்த் தனது இமயமலை சுற்றுப்பயணத்தின் போது சித்தர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தனது ஆன்மீக குருவான பாபாஜி குகைக்கு சென்று வழிபடவும் முடிவு செய்துள்ளார். மேலும் அவர் ரிஷிகேஷ், கேதர்நாத் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளார்.

முன்பு, திருப்பதி ஏழுமலையான், ராகவேந்திரா சுவாமிகள் மீது அதிக பக்தி கொண்டிருந்த ரஜினியிடம், இமயமலையில் இன்றும் உயிரோடு இருப்பதாக கருதப்படும் பாபாஜி பற்றி ரஜினிகாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. ஆன்மிக வழிகாட்டியான பாபாஜியின் குகைக்கு சென்று தினமும் தியானம் செய்ய திட்டமிட்டுள்ளார். பாபாஜி குகையில் தியானம் செய்வது தனக்கு மிகுந்த மன நிறைவையும். நிம்மதியையும் தருவதாக ரஜினிகாந்த் பலமுறை தெரிவித்துள்ளார். மீண்டும் அதுபோல அனுபவத்தை பெறவே தனது தற்போதைய இமயமலை பயணத்தையும் அமைத்துக் கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 408

    0

    0