6 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் விசிட்… மகளுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த்… அமீன் தர்காவுக்கும் செல்ல திட்டம்!!

Author: Babu Lakshmanan
15 December 2022, 9:11 am

நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதியில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

கடந்த 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 73வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு திருப்பதிக்கு சென்றார். அங்கு அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், இன்று அதிகாலை தனது மகளுடன் சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர், “6 ஆண்டுகளுக்கு பின் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது” என்றார்.

6 ஆண்டுக்கு பிறகு திருப்பதிக்கு நடிகர் ரஜினிகாந்த் தற்போதுதான் வருகை புரிந்துள்ளார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் அங்கு குவியத்தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, இன்று காலை 11 மணிக்கு ஆந்திராவின் கடப்பாவில் உள்ள மிகவும் பிரபலமான அமீன் தர்காவுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் செல்கிறார்கள். அவர்களின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…