‘எனக்கு நான் தான் போட்டி’… காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்.. வாயடைத்து போன விஜய் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
27 January 2024, 10:52 am

ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் காக்கா – கழுகு கதை ஒன்றை கூறினார். அதாவது :- காக்கா அனைவரையும் தொந்தரவு செய்யும், ஆனால், கழுகு எப்போதும், யாரையும் தொந்தரவு செய்யாது. அதேவேளையில், காக்கா எப்போது எல்லாம் தொல்லை தருகிறதோ, அப்போது எல்லாம் கழுகு எதுவுமே செய்யாமல், மேலே பறந்து போய்விடும்.

காக்காவால் சண்டை தான் போட முடியும். ஆனால் அதனால், உயரமாக பறக்க முடியாது. உலகின் உன்னதமான மொழி மெளனம் தான். நான் காக்கா கழுகுன்னு சொன்ன உடனே, இவரை தான் சொல்றேன்னு சோஷியல் மீடியால சொல்லுவாங்க. இங்க குலைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலையை பார்த்துட்டு நேரா போயிட்டே இருக்கணும், என்று தனது ஸ்டெயிலில் கூறினார்.

அண்ணமையில் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் என்று அவரது ரசிகர்கள் கூறி வரும் நிலையில், ரஜினிகாந்த் சொன்ன காக்கா, கழுகு கதை விஜய்யை பற்றித்தான் சொல்வதாக கூறி சமூக வலைதளங்களில் பெரிய விமர்சனங்களே எழுந்தது. ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மாறி மாறி தாக்கி சமூகவலைதளங்களில் சண்டை போட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில், லால் சலாம் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா – கழுகு கதை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக மேடையில் அவர் பேசியதாவது :- காக்கா – கழுகு கதை விஜய்யை விமர்சித்து கூறியதாக பலர் தவறாக புரிந்து கொண்டனர். விஜய்யை விமர்சித்ததாக சமூகவலைதளங்களில் பேசுபொருளானது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். விஜய் படிப்படியாக வளர்ந்து பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார். விஜய்க்கும், எனக்கும் போட்டியில்லை ; எனக்கு நானே போட்டி.. எனக்கு என் படங்களே போட்டி ; விஜய்க்கு விஜயே போட்டி. விஜய்யை போட்டியாக நினைப்பதோ, என்னை அவர் போட்டியாக நினைப்பதோ இருவருக்கும் கவுரவம் ஆகாது.

விஜய் அரசியலில் நுழைய உள்ளார் ; சமூக சேவைகளையும் செய்து வருகிறார். என்றும் நான் விஜய்யின் நலம் விரும்பியாகவே இருப்பேன் ; தயவு செய்து இரண்டு பேருடைய ரசிகர்களும் ஒப்பிட வேண்டாம் ; இது என்னுடைய அன்பான வேண்டுகோள், எனக் கூறினார். இதன்மூலம், ரஜினி, விஜய் ரசிகர்களின் மோதலுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ