வீடு திரும்பிய ரஜினி கவனமாக இருக்க வேண்டும் : மருத்துவர்கள் கூறிய அட்வைஸ்..!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2024, 11:29 am

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினி இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை நடித்து முடித்து தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் படம் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளது,.

இந்த நிலையில் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினியின் அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரியதாக உள்ளதால் அதற்கான சிகிச்சை எடுக்கப்பட்டது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயிலும் வீக்கம் இருந்தது. பின்னர் அதற்கான STENT பொறுத்தப்பட்டு சிகிச்சை நிறைவுபெற்றது.

சிகிச்சை முடிந்தாலும் ரஜினிகாந்த் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். 3 நாட்கள் சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார்.

Rajinikanth return hospital

இந்த நிலையில் ரஜினி சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், ரஜினியின் நண்பரும், மருத்வருமான சொக்கலிங்கம், அவரின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: முன்னாள் எம்பி மகன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை ; முக்கிய கொலை வழக்கில் போலீசார் அதிரடி.. பதற்றம்… !!!

ரஜினிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை சிங்கப்பூரில் செய்யப்பட்டது. 73 வயதாகும் அவர் இனிதான் கவனமுடன் செயல்பட வேண்டும.

ரத்தக்குழாயில்ொழுப்பு படிவது வழக்கமாக வயதாகும் போது ஏற்படும். அதனால் தூக்கமின்மை, சர்க்க அளவு மாற்றம், ரத்த அழுத்தம் நேரலாம். ரத்தக் கொழுப்பு அதிகரிக்க கவலை மட்டுமே காரணம் என கூறும் அவர், மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி தான் தேவை.

சரியான உணவு, நல்ல தூக்கம் கெடும் போது ரத்தக் குழாயில்ொழுப்பு சேரும். அதுதான் தற்பேது ரஜினிக்கு நடந்துள்ளது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயிலும் வீக்கம் இருந்ததால் தற்போதைய காலக்கட்டத்தில் அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை. அதற்கு பதிலாக STENT பொறுத்தப்பட்டுள்ளது. ரஜினி தற்போது மது அருந்துவதில்லை, புகைப் பழக்கம் இல்லை.. மருத்துவர்கள் அறிவுரையை கடைப்பிடிக்கும் நபர் என்பதால் அவருக்கு பிரச்சனை ஏதும் இல்லை என கூறியுள்ளார்.

  • Leo Ban case quashed by MHC Bench லோகேஷுக்கு உளவியல் சோதனைச் செய்யக் கோரிய மனு தள்ளுபடி.. லியோ வெளியாகி ஒரு வருடத்திற்குப் பிறகு உத்தரவு!