நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி..? விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்ட தகவல்… பரபரப்பில் தமிழக அரசியல்…!!!

Author: Babu Lakshmanan
9 October 2023, 4:33 pm

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக வெளியான தகவலுக்கு விஜய் மக்கள் இயக்கம் பதில் அளித்துள்ளது.

2019 மற்றும் 2021ல் நடந்த தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தே அதிமுக போட்டியிட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக போட்டியிட்ட தேர்தல்களில் எதிர்பார்தத வெற்றி கிடைக்கவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததும் ஒரு காரணமாக சொல்லப்பட்டு வந்தது.

இருப்பினும், பாஜக கூட்டணியில் அதிமுக நீடித்து வந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால் இரு கட்சியினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஜெயலலிதா, அண்ணா குறித்து அவர் பேசியது அதிமுகவினரிடையே பொறுமையை இழக்கச் செய்தது. இதனால், பகிரங்கமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இருப்பினும், தன்னுடைய கருத்தில் இருந்து அண்ணாமலை பின்வாங்கவில்லை.

ஒருகட்டத்தில் பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக அறிவிப்பை வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2024ல் மட்டுமல்ல 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அதிமுகவுடன் சமரசம் செய்ய பாஜக எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, அதிமுகவும், பாஜகவும் கூட்டணியை பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் தனித்தனியே ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை தக்க வைத்துக் கொள்ள பாஜக காய் நகர்த்தி வருகிறது.

இந்த நிலையில், அடுத்த நடைபெற இருக்கும் சட்டப்பேரவையில் போட்டியிட நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தயார் செய்து வருகிறார். இந்த சூழலில், அவர் பாஜகவுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது X தளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- இன்றைய தினமலர் நாளிதழில் நடிகர் விஜய் அவர்களது பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு அவ்வாறு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்படுள்ள செய்தி எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி.

நடிகர் விஜய் அவர்களது பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்களை கொண்டு தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள இந்த பொய்யான செய்திக்கு நடிகர் விஜய் அவர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமாக மறுப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Ajith Kumar Vidamuyarchi movie விடாமுயற்சி படத்தில் ட்விஸ்ட்…அஜித்துடன் இணைந்த பிரபல நடிகை..படக்குழு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!
  • Views: - 371

    0

    0