லியோவுக்கு சோதனை மேல் சோதனை… பட டிக்கெட்டுகள் விற்பனையில் குளறுபடி… தியேட்டர் வெளியிட்ட அறிவிப்பு

Author: Babu Lakshmanan
11 October 2023, 11:45 am

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிரது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

இந்த படம் வெளியாக இரு வாரங்களே உள்ள நிலையில் அந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் வில்லனை கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார். அது பீப் போடாமல் அப்படியே வெளியாகி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, லியோ படத்தில் நான் ரெடிதான் வரவா பாடலுக்கு நடனமாடிய நடனக் கலைஞர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை என்ற மற்றொரு பிரச்சனையும் வெடித்தது. இது லியோ படக்குழுவினருக்கு அடுத்தடுத்து நெருக்கடியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், மதுரை சினிப்பிரியா திரையரங்கில் லியோ படத்தின் போலி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சினிப்பிரியா திரையரங்கு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இது போலி டிக்கெட்டுகள் என்றும், இந்த டிக்கெட்டுக்கும், திரையரங்கு நிர்வாகத்திற்கும் எந்த பொறுப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அடுத்தடுத்து சர்ச்சைகள் கிளம்பி வருவது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 663

    0

    0