2026-ல் தமிழக முதல்வரே: நடிகர் விஜய்க்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பேசு பொருளாக அமைந்துள்ளது.
நடிகர் விஜய் அரசியலில் நுழைவதற்கான அடித்தளத்தை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக 234 தொகுதியிலும் 10,12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து சந்தித்து மாணவர்களை கெளவுரவப்படுத்தி, அவர்களுக்கு நடிகர் விஜய் நிதி உதவி வழங்கினார்.
இது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை குஷிப்படுத்த, ரசிகர்கள் விஜய் அரசியல் பிரவேசம் உறுதி செய்து தற்போது விதவிதமான போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
வருகின்ற ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் தனது 49வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில், மதுரை தெற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் “2026 தமிழக முதல்வரே! எங்கள் தலைமுறையை தலைநிமிர்த்த தலைவரே”, நீங்கள் வாழ்க பல்லாண்டு எனவும், தமிழ்நாட்டு தலைமை செயலக கட்டடத்தின் முன் நடிகர் விஜய் நடந்து வருவது போலவும் “நாளை தமிழகத்தின்… காத்திருக்கிறது அண்ணா”, எனவும் போஸ்டர் அடித்து மதுரை மாநகரின் பல்வேறு பகுதியில் ஒட்டியுள்ளனர். இது தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.