தென் மாவட்டங்களை குறி வைக்கும் நடிகர் விஜய்.. வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகளை இன்று வழங்க ஏற்பாடு..!!

Author: Babu Lakshmanan
30 December 2023, 10:09 am

நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் இன்று வெள்ள நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

ஐதராபாத்தில் 68வது பட சூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய், விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை திரும்பினார். விஜயகாந்த் உடலுக்கு நேற்றைய தினமே அஞ்சலி செலுத்திய அவர், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இருக்கிறார்.

இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் அவர், நெல்லையில் உள்ள கேடிசி நகரில் காலை 11 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் வருகையை நோக்கி ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்து வரும் நடிகர் விஜய், இந்த முறை தூத்துக்குடி, நெல்லையை குறி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அண்மையில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை நேரில் அழைத்து, அவரே விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ