விஜய்யா..? ஜோசப் விஜய்யா…? சைலண்டாக நடந்த சம்பவம் ; சர்ச்சையை கிளப்பிய பேப்பர் விளம்பரம்…!!

Author: Babu Lakshmanan
11 May 2024, 6:57 pm

விஜய்யா..? ஜோசப் விஜய்யா…? சைலண்டாக நடந்த சம்பவம் ; விவாதத்திற்குள்ளான பேப்பர் விளம்பரம்…!!

கடந்த பிப்ரவரி 2ம் தேதி தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியாக பதிவு செய்தார் நடிகர் விஜய். நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும், 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்கப் போவதாக அறிவித்து, அதற்கான வேலைகளிலும் நடிகர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

பொதுவாக தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியை பதிவு செய்தால், மக்களின் ஆட்சேபணை குறித்து அறிவதற்காக, கட்சியின் பெயர், தலைவர், நிர்வாகிகளின் பெயர் மற்றும் அலுவலகம் விபரங்களை செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும்.

மேலும் படிக்க: மதுரையை புரட்டிப்போட்ட கனமழை… தண்ணீரில் தத்தளித்த பார்வையற்ற பாடகர் ; போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

இந்நிலையில், தற்போது கட்சியின் பதிவு மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்த தகவலை பொது நோட்டீஸாக வெளியிட்டுள்ளனர். அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தகிரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த பதிவு குறித்து யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்படி யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் விண்ணப்பித்தவர்களுக்கு பெயர் ஒதுக்கப்பட்டு, கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும். ஒரு வேலை யாரேனும் ஆட்சேபனை தெரிவித்தால், அந்தப் பெயரும் கட்சியும் பதிவு செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விதிகளின்படியே, தமிழக வெற்றிக் கழகத்தின் விபரங்கள் செய்தித்தாளில் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த விளம்பரத்தில் தான் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தொடக்கம் தொடர்பான அறிவிப்பாணையில் C.விஜய் என்று குறிப்பிட்டே, கையெழுத்து போட்டிருந்தார் தலைவர் விஜய். தற்போது, விளம்பரத்தில் ஜோசப் விஜய் என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

மேலும், கட்சியை ஆரம்பிக்கும் போது கட்சியின் தலைவர் விஜய் என்றே குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போதைய விளம்பரத்தில் மட்டும் ஜோசப் விஜய் என குறிப்பிட்டது ஏன்..? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 602

    0

    0