‘நீங்க தான் சினிமாவை குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா’…? ரெட் ஜெயண்ட் நிறுவனம் மீது நடிகர் விஷால் தாக்கு..!!!

Author: Babu Lakshmanan
16 April 2024, 10:07 am

படம் வெளியிடுவதில் நெருக்கடி கொடுத்ததாக ரெட் ஜெயண்ட் மீது நடிகர் விஷால் ஆவேசமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்துவதாக எதிர்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கேற்றாற் போலவே, திரைத்துறையிலும் அடிக்கடி நிகழும் சம்பவங்களும் அமைந்துள்ளன.

அண்மையில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த நடிகர் விஷாலின், ரத்னம் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த நிலையில், நடிகர் விஷால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் பற்றி ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் படிக்க: ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுக இளைஞர்… தேர்தல் பறக்கும் படையினரிடம் பிடித்துக் கொடுத்த கோவை பொதுமக்கள்!!

அவர் கூறியதாவது :- ஒரு படத்தை தள்ளிப்போ என சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. சினிமா என் கையில் இருக்கு என சொன்னவர்கள் யாரும் உருபட்டதாக சரித்திரம் கிடையாது. என் தயாரிப்பாளர் வட்டி கட்டி கொண்டிருக்கிறார். நீங்க ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு, அந்த படம் வரக்கூடாது என சொல்றீங்க. யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. நீங்க தான் தமிழ் சினிமாவை குத்தகைக்கு எடுத்தீருக்கீங்களா என நான் கேட்டேன்.

65 கோடி செலவு செய்திருக்கிறார் மார்க் ஆண்டனி தயாரிப்பாளர். செப்டம்பர் 15 ரிலீஸ் என ஒன்றரை மாதத்திற்கு முன்பே அறிவித்துவிட்டார். வேறு தேதியில் ரிலீஸ் செய்ய சொல்ல நீ யார். நீயும் ரிலீஸ் பண்ணு, நானும் ரிலீஸ் பண்றேன், மக்கள் முடிவு பண்ணட்டும் எந்த படத்தை பார்க்க வேண்டும் என்று. நீங்க மட்டும் தான் ரிலீஸ் பண்ணி சம்பாதிக்க வேண்டும் என ரூல் இருக்கிறதா” என விஷால் ஆவேசமாக கேட்டிருக்கிறார், எனக் கூறினார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!