என்னது, ஆன்லைனில் ஓட்டு போடுவீங்களா..? நடிகை ஜோதிகாவின் பதிலை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!!!

Author: Babu Lakshmanan
3 May 2024, 4:46 pm

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வராதது குறித்து நடிகை ஜோதிகா கொடுத்த விளக்கம் விவாதப்பொருளாகியுள்ளது.

நடிகை ஜோதிகா தனது கணவர் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் மும்பைக்கு குடியேறி விட்டார். இந்த சூழலில், இந்தி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, தனது புதிய படமான ஸ்ரீகாந்த் படத்துக்கு புரமோஷன் செய்யும் வகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நடிகர் சூர்யா தனது தந்தை மற்றும் தம்பியுடன் ஓட்டுப் போட வந்த நிலையில், நீங்கள் மட்டும் ஓட்டுப்போட வராதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க: ஆவினில் ஒரு ரூபாய்க்கு மோர்… 300 யூனிட் இலவச மின்சாரம்… தமிழக அரசுக்கு டிமேண்ட் வைத்த வானதி சீனிவாசன்..!!!

அந்தக் கேள்விக்கு பதில் அளித்த ஜோதிகா ”ஒவ்வொரு வருஷமும் ஓட்டுப் போடுறேன். இந்த தடவை மிஸ் ஆகிடுச்சு” என்றார். உடனடியாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தான் ஓட்டு போட முடியும் என பத்திரிக்கையாளர்கள் சொன்ன நிலையில், சற்று ஜெர்க்கான ஜோதிகா, “ஸாரி.. ஊரில் இல்லை, பர்ஷனல் விஷயம் காரணமாக ஓட்டுப் போட வரமுடியவில்லை,” என பதில் அளித்துள்ளார். மேலும், ஆன்லைனிலும் ஓட்டுப்போடலாம் என்று அவர் கூறியது விவாதப் பொருளாகியுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!