அடுத்தவனுக்கு ஆரியமாயை.. ஆனா நமக்கு சுபயோக சுபதினம், சுபமுகூர்த்தம் : இதுதா உங்க பகுத்தறிவா.. திமுகவை விளாசிய நடிகை!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2022, 3:30 pm

அடுத்தவனுக்கு வந்தா ஆரியமாயை. நமக்குனா சுபயோக சுபதினம் சுபமுகூர்த்தம் என உதயநிதி பதவியேற்கும் நேரம் குறித்து நடிகை திமுகவை விமர்சித்துள்ளார்.

உதயநிதியை அமைச்சராக்கும் தீர்மானத்தை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தனர். அமைச்சர்கள் பலரும் உதயநிதி அமைச்சராவதற்கு விருப்பம் தெரிவித்தனர்.

வாரிசு அரசியல் விமர்சனங்கள் கடுமையாக எழுந்துவிடும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் இதுநாள்வரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் உதயநிதி அமைச்சராவதற்கான கால நேரம் கைகூடி வந்துள்ளது. டிசம்பர் 14ஆம் தேதி புதன்கிழமை மகம் நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியில் காலை 9.30 மணிக்கு குரு ஹோரையில் அமைச்சராக பதவியேற்கப் போகிறார் உதயநிதி ஸ்டாலின்.

இதைத்தான் நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 14th December 2022. Most auspicious day , 9.30 am excellent auspicious time.
அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்ததம் எல்லாம் பார்த்து தொடங்குவதே பகுத்தறிவு என பதிவிட்டுள்ளார்.

  • Vikram to play villain in Marco sequel வெயிட்டான வில்லன் ரோலில் விக்ரம்…மலையாள சினிமாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல இயக்குனர்..!
  • Views: - 531

    0

    0