மிகப்பெரிய மெஜாரிட்டி இருக்காது.. ஆனால், சத்தியமாக அது மட்டும் கண்டிப்பாக நடக்கும் ; பாஜக குறித்து நடிகை கஸ்தூரி கணிப்பு..!!

Author: Babu Lakshmanan
12 June 2023, 2:43 pm

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜவுக்கு மிகப்பெரிய மெஜாரிட்டி எல்லாம் கிடைக்கப் போவதில்லை என்று திரைப்பட நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நடிகை கஸ்தூரி திருப்பூருக்கு வந்திருந்தார். அங்கு அவர் திருப்பூர் குமரன் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசியதாவது;- அமித்ஷா தேர்தலை குறிவைத்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதாக தெரியவில்லை. ஒற்ற கருத்து உடைய அமைப்புகளை ஒருங்கிணைக்க அவர் வந்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜவுக்கு மிகப்பெரிய மெஜாரிட்டி எல்லாம் கிடைக்கப் போவதில்லை என்று அவர் கூறினார்.

மேலும், கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாக்கு வங்கி உருவாவதை பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாறுதல் அவ்வளவு சீக்கிரம் வந்து விடாது. பல 10 ஆண்டுகள் திராவிட கழக ஆட்சிகளை கண்ட தமிழ்நாட்டில் அவ்வளவு சீக்கிரம் மாற்றம் வராது. என்றார்.

இத்துடன் ரியலிஸ்டிக்கா பார்க்கும் போது, பெரிய புரட்சி மாற்றம் எல்லாம் இருக்காது என்றும், கண்டிப்பாக வளர்ச்சி இருக்கும் என்றும் கூறினார். 21ம் நூற்றாண்டில் இந்தியாவில் இவ்வளவு பெரிய விபத்து நடப்பது தலைக்குனிவு தான் என்றார். மேலும், எந்த அடிப்படையில் உதயநிதி ஒடிசாவுக்கு போய் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 477

    0

    0