சட்டம் நெருங்கினால் வயசாயிடுச்சு, நெஞ்சு வலினு சொல்றது.. டாக்டர் ஷர்மிளாவுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி!!
தெலங்கானாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கமா ரெட்டி தொகுதியில் முதல்வர் வேட்பாளர்கள் இருவரும் போட்டியிட்டனர்.
அதாவது பிஆர்எஸ் கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான சந்திரசேகர ராவும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான ரேவந்த் ரெட்டியும் போட்டியிட்டனர்.
இவர்களை எதிர்த்து பாஜக சார்பில் கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி கமா ரெட்டி தொகுதியில் போட்டியிட்டார். யாரும் எதிர்பாரா வகையில் இருவரையும் தோற்கடித்து பாஜக வேட்பாளர் கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி வெற்றி பெற்றார்.
பெரிதும் கவனிக்கப்பட்ட கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி, தற்போது நகர மாஸ்டர் பிளானின் ஒரு பகுதியாக சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக வட்லூர் சாலையில் உள்ள தனது வீட்டை இடித்தார்.
அந்த சாலையில் ஏராமான வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்பட்டது. அதில் பாஜக எம்எல்ஏ வீடும், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் சாலை அமைக்க இடையூறாக இருந்த தனது வீட்டை புல்டோசர்கள் கொண்டு கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி இடித்துள்ளார். சொந்த வீட்டை சாலை பணிக்காக இடித்து தள்ளியதால் மீண்டும் பாஜக எம்எல்ஏ பேசப்பட்டார்.
இது குறித்து நடிகை கஸ்தூரி, தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்து, நம்புகிறீர்களோ இல்லையோ! தெலுங்கானா பாஜக எம்எல்ஏ கேவி ரமணா ரெட்டி சாலை அமைக்க தனது சொந்த வீட்டை இடித்துள்ளார். என்ன ஒரு மனிதன்! ரேவந்த் ரெட்டி மற்றும் கே.சி.ஆர் இருவரையும் அவர் சட்டசபை தேர்தலில் வென்றதில் ஆச்சரியமில்லை! என குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த டாக்டர் ஷர்மிளா, ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிச்சிருக்காங்க…இதுல என்ன பெருமை? அரசு இடிச்சா அசிங்கம்னு முந்திகிட்டு… ஏதோ தியாகி மாதிரி வேஷம் போட வேண்டியது … இதுக்கு What a man!என கஸ்தூரியின் பதிவை ரீடிவீட் செய்து பதில் அளித்திருந்தார்.
ஷர்மிளாவின் இந்த பதிவை பார்த்த நடிகை கஸ்தூரி, எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் பட்டா மோசடி எல்லோருக்கும் கைவருமா? நிலத்தை அபகரித்து ஏரியை ஆக்கிரமித்து ஆஸ்பத்திரி, கல்லூரி, பள்ளி, ஹோட்டல் என்று கட்டி சட்டம் நெருங்கினால் வயசாயிடிச்சு, நெஞ்சுவலி என்று சொல்லும் திருடர்களுக்கு வலிய சென்று விதிமீறலை திருத்திக் கொள்வதெல்லாம் புரியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.