இளவரசருக்கு டெங்கு… ராஜாவுக்கு எய்ட்ஸ்… சரியான பொருத்தம்தான் ; திமுகவை மீண்டும் சீண்டிய கஸ்தூரி..!!

Author: Babu Lakshmanan
8 September 2023, 7:30 pm

சனாதனம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்பி ஆ.ராசா ஆகியோரை நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது வெடித்துள்ள முக்கிய பிரச்சனை சனாதனம் ஒழிப்பு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தான். அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர், டெங்கு, மலேசியா, கொரோனாவை போல், சனாதனத்தையும் ஒழிப்பதே சரியாகும் என பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

Udhayanidhi - Updatenews360

அமைச்சர் உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள், இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, I.N.D.I.A. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களே அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனங்களை கூறி வருகின்றனர். அதேவேளையில், திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் உதயநிதியின் இந்தக் கருத்துக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

அந்த வகையில், திமுக எம்பி ஆ.ராசா, சனாதன தர்மம் என்பது எய்ட்ஸ் மற்றும் தொல்நோயை போன்றது எனக் கூறி மேலும் சர்ச்சையை உண்டாக்கியிருந்தார்.

ஏற்கனவே அமைச்சர் உதயநிதியை கடுமையாக சாடியிருந்த நடிகை கஸ்தூரி, X தளத்தில் மீண்டும் கடுமையாக விமர்சித்து பதிவு போட்டுள்ளார். அதாவது, இளவரசருக்கு (உதயநிதி) டெங்கு கொரோனா… ராஜாவுக்கு (ஆ.ராசா) எய்ட்ஸ் தொழுநோய். பொருத்தம்தான். அட, மாநாடு வேணாம்யா… திராவிடிய விழுதுகள் ஊழல் அழிப்பு , பலதாரமணம் எதிர்ப்பு , லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா? ஹூம் . பிடிக்காத விஷயத்தை தானே எதிர்க்க முடியும், என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 519

    0

    0