அவங்க சாதிய பத்தி பேசுனீங்களே… இவங்க சமூகத்தை பத்தி பேச தைரியம் இருக்கா..? விருதுநகர் கூட்டு பலாத்கார சம்பவம்… திமுகவை வம்புக்கு இழுத்த கஸ்தூரி
Author: Babu Lakshmanan23 March 2022, 5:36 pm
விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தை வைத்து திமுகவினரை நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி வம்புக்கு இழுத்துள்ளார்.
விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (27). பால் பண்ணை நடத்தி வரும் இவரும் பேஸ்புக்கில் அறிமுகமான தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவந்த பாண்டியன் நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஹரிஹரன் பலமுறை தனிமையில் இளம்பெண்ணிடம் உறவு வைத்துள்ளார். மேலும், இதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, ஹரிஹரன் நண்பர்களான ரைஸ்மில் உரிமையாளரும் திமுக இளைஞரணி அமைப்பாளருமான ஜூனத் அகமது (27), டிரைவர் பிரவீன் (21), மற்றும் 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேரும் ஹரிஹரன் காதலித்த இளம்பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் எனக் கூறி பல முறை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து தனக்கு தெரிந்த மாடசாமி (37) என்பவரிடம் கூறியபோது, அந்த வீடியோவை அவர் தனது செல்போனுக்கு பார்வர்டு செய்துகொண்டு இளம்பெண்ணை மிரட்டி அவரும் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகுறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணின் காதலன் ஹரிஹரன் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளி மாடசாமி (வயது 37), விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் பிரவீன் (22), விருதுநகர் செந்தி விநாயகபுரம் தெருவைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர் ஜூனாத் அகமது (வயது 24), மற்றும் 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை பயின்று வரும் நான்கு மாணவர்கள் என 8 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தை கண்டித்து, திமுகவினரை நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி வம்புக்கு இழுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள் விருதுநகர் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்? பெண்ணின் மானம் காக்க கூட கட்சி பார்த்துதான் குரல் கொடுப்பீர்களா? ராகவன் ஜாதியை இழுத்தவர்கள் எங்கே, ஹரிஹரன், ஜூனைத் அஹமது , மாடசாமி முதலானோரின் சமூகத்தை பேசுங்க பாப்போம்?,” எனக் குறிப்பிட்டுள்ளார்.