‘இப்பவும் சொல்கிறேன்… நான் சாகும் வரை முஸ்லீம் தான்’ ; ரசிகருக்கு பதிலடி கொடுத்த குஷ்பு ; வைரலாகும் வலைதள பதிவு

Author: Babu Lakshmanan
23 January 2024, 9:30 pm

சென்னை ; ரசிகர் ஒருவர் பா.ஜ.க குறித்து குஷ்பூ பகிர்ந்திருந்த பழைய பதிவு ஒன்றை பகிர்ந்ததற்கு, அவர் பதிலளித்த பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், பாஜகவுக்கு தாவினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய இவரை, பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

நேற்று உத்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இதில், பல பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், குஷ்பூ பங்கேற்கவில்லை என அறிவித்தார். மேலும், தற்போது, பிரதமர் மோடியின் ஆட்சியில் ராமரை பார்க்க போவதாகவும், ரொம்பவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், ரசிகர் ஒருவர் குஷ்பூவின் பழைய பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக குஷ்பூ தனது பதிவில், ‘நான் சாகும் வரை முஸ்லீம் தான் சகோதரனே. நான் மதம் மாறவில்லை, மாறவும் மாட்டேன். உங்களை பொறுத்தவரை எல்லாம் ஆன்மீகம் மதம் சார்ந்தது. ஆனால் என்னை பொறுத்தவரை ஆன்மீகம் ஒருமைப்பாடு பற்றியது.

கடவுள் ஒருவரே என்று நான் நம்புகிறேன். ராமர் அனைவராலும் வணங்கப்படுகிறார். உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்துங்கள், நீங்கள் நன்றாக உணருவீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 397

    0

    0