நயினாரை சிக்க வைத்ததே அண்ணாமலைதான்… மன்சூர் அலிகான் பகீர் குற்றச்சாட்டு…!!

Author: Babu Lakshmanan
8 April 2024, 2:45 pm

தீய சக்தி பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும் எனக்கூறி வேலூரில் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் மன்சூர் அலிகான் பூசணிக்காயை உடைத்தார்.

வேலூர் மாவட்டம் வேலூர் உழவர் சந்தை பகுதியில் இன்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், வேலூர் மக்களவைத் தேர்தலில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் மன்சூர் அலிகான், வியாபாரிகள் இடையே வாக்கு சேகரித்தார். அப்போது, உழவர் சந்தையில் உள்ளே சென்று வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம், விவசாய பொருட்களின் விலை என்னவென்றும், தேங்காய் விலை மிகவும் குறைவாக இருக்கின்றது, விளைவிக்கும் விவசாயிக்கு இலாபம் கிடைக்குமா..? என்றும் கேட்டறிந்தார்.

மேலும் படிக்க: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கு : தடையுடன் நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!

பின்னர், சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்த கீரையை வாங்கி அங்கிருந்த மாடுகளுக்கு ஊட்டினார். மேலும், பூசணிக்காயை வாங்கி இன்று அம்மாவாசை என்பதால் தீய சக்தியான பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நான்தான் வெற்றி பெறப் போகிறேன், என கூறி பூசணிக்காயை உடைத்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மன்சூர் அலிகானிடம், காங்கிரஸ் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால், ராகுல் ஒதுங்கி வழி விட வேண்டும் என பிரசாந்த் கிஷோர் அட்வைஸ் கொடுத்துள்ளாரே என கேட்டதற்கு அவர் அளித்த பதிலாளவது :- பிரசாந்த் கிஷோர் யார் அவர் ஒரு மாமா… டாபர் மாமா, அவர் ஒரு தரகர் பிராமின் கம்யூனிட்டியை சேர்ந்த சிறந்த மாமனிதர். நான் ஏன் கம்யூனிட்டியை கூறுகிறேன் என்றால், அவர்கள் இப்படித்தான் வேர் அறுப்பார்கள்.

மேலும் படிக்க: ‘போனமுறை கேப்டனுடன் வந்தேன்… இந்த முறை’.. பிரச்சாரத்தின் போது கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்…!!

மக்களை அவர் யூகங்கள் வகித்து 600 கோடி 6000 கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டு குள்ளநரித்தனம் செய்து எப்படி ஜெயிப்பது என ஆலோசனை கூறுபவர். ராகுல் காந்திக்கு தகுதி இல்லை என்றால் மோடி தான் வர வேண்டுமா…? ராஜீவ் காந்தி அவர்களின் மரணத்திற்குப் பிறகு 34 வருடங்கள் எந்த அரசு பதவியிலும், அதிகாரத்திலும் அந்தக் குடும்பம் இல்லை. மிகப்பெரிய நடைபயணத்தை ராகுல் காந்தி போல் யாரும் செய்யவில்லை.

ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி தான் பிரதமராக வரவேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம். என்னுடைய கருத்தும் அதே. 38 இடங்களில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறேன். பிரசாந்த் கிஷோர் ஏதோ வன்மத்தில் பேசுகிறார். இது தெளிவாக தெரிகின்றது. அவர் கூற்று ஏற்படுவது அல்ல, மடத்தனமாது, எனக் கூறினார்.

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன். அவருடைய நான்கு கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவருடைய ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர் எனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார் என்பது குறித்த கேள்விக்கு மன்சூர் அலிகான் அளித்த பதிலாவது :- அது என் பணம், அவருக்கு அதில் சம்பந்தம் இல்ல. எனக்கு பல தயாரிப்பாளர்கள் பணம் தரவில்லை. அதெல்லாம் வாங்கி அங்கே தான் கொடுத்து வைத்ததாக கூறினார்கள். அவர் பணம் இல்லை என்று கூறிவிட்டார் அல்லவா, அந்த பணம் என்னுடைய பணம் அதை எனக்கு அனுப்பி வையுங்கள், எனக் கூறினார்.

அதே போல, பாஜக ஓட்டு போட பணம் கொடுக்க மாட்டோம் எனக் கூறிய நிலையில், பாஜக வேட்பாளருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “அதுதான் செய்திகளில் வந்து விட்டதே. அங்கே கொடுக்க வைத்து, இங்கே அண்ணாமலை போனை போட்டு புடிக்க வைத்து விட்டார் அல்லவா..? அண்ணாமலைக்கு அதுதானே வேலை காட்டிக் கொடுக்கிறது, கொடுக்கிறது தானே, வேலை எக்கேடோ கெட்டுப் போகட்டும், இந்த தொகுதிக்கு நான் தான் மாப்பிள்ளை. மக்களிடம் எனக்கு அமோக வரவேற்பு உள்ளது. மக்கள் என் மீது அன்பு செலுத்துகின்றனர்,” எனக் கூறினார்.

நீங்கள் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட கே.வி.குப்பத்தும் பகுதியில் 7 லட்சம் பறிமுதல் செய்துள்ளார்களே என்பது குறித்து கேட்டதற்கு, தேர்தல் ஆணையம் ஏதேதோ வைத்து சோதனை செய்கின்றனர். எனது வாகனத்தை சோதனை செய்வதில்லை. நான் 100 கோடி வைத்துக் கொண்டு சுற்றி வருகிறேன். என்னை பிடிக்க வரவே மாட்டேங்கிறாங்க, என காமெடியாக கூறினார்.

மோடி வேலூருக்கு வருவதற்கு திமுக, பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்து தான் இதற்கெல்லாம் அனுமதி தருகின்றனர் என்று பரவலாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது என்பது குறித்து கேட்டதற்கு, “அனுமதி கொடுக்கவில்லை என்றால் திமுகவின் மீதுதான் குற்றம் சாட்டுவீர்கள். நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. நான் இங்கு போட்டியிடுவதால் தான் மோடி வருகின்றார். குஜராத், அருணாச்சல பிரதேசத்தில் பிஜேபி வென்றால், அருணாச்சலம், பஞ்சாப், தமிழகம் அனைத்தும் தனியாக சென்று விடும்,” என்றார்.

50 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் இடத்தில் மோடி வருகையால் பொதுக்கூட்டத்திற்கு மேடை அமைத்துள்ளார்கள். இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. அது விவாத பொருளாகியுள்ளது என்பது குறித்து கேட்டதற்கு, “இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை நடத்தும் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது. அது தவறு. இதிலிருந்து அவர் மனம், ஊனம் அவர்களின் வக்கிர புத்தியின் உச்சத்தை காட்டுகின்றது. இது மாபெரும் தவறு. ஒரு மதத்தின் நல்லிணக்கத்தை குலைக்கின்ற செயல். மதவெறியை உண்டு செய்வது, அவருடைய புத்தி தெரிகின்றது இந்து மக்களை அப்படி செய்பவர்கள் மற்ற மதத்தினரின் வழிபாட்டு உரிமையை பறிக்கக் கூடாது. வேறு எங்காவது பொதுக்கூட்டத்தில் நடத்தி இருக்கலாம். அவர்களுக்கு இடமில்லையா…? பொட்டல்காடு ஆயிரம் கணக்கில் உள்ளது. அங்கெல்லாம் நடத்த வேண்டியதுதானே? எனக் கூறினார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 460

    0

    0