நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தது எப்படி..? அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கலையா..? அமைச்சர் விளக்கம்..!!
Author: Babu Lakshmanan29 ஜூன் 2022, 1:59 மணி
நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையில் தொற்று பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.
மீனா கணவரின் இரங்கல் செய்தியைக் கேட்ட திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர், அவரது வீட்டுக்கு நேரில் சென்றும், சமூக வலைதளங்களின் மூலமும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, மீனாவின் கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால், இதற்கு மீனாவின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதேவேளையில், புறாவின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததால், அவரது நுரையீரலில் தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், கொரோனாவால் வித்யாசாகர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவலுக்கு நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது :- சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என ஊடகத்தினரைக் கேட்டுக்கொள்கின்றேன். மீனாவின் கணவர் 3 மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
கொரோனா அவரது நுரையீரலை வெகுவாக பாதித்தது. தயவு செய்து அவர் கொரோனாவால் இறந்ததாக தவறான தகவலை பரப்பி, மக்களை அச்சமுறுத்தாதீர்கள். நம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்தான். ஆனால் தயவு செய்து அச்சுறுத்தாதீர்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- நடிகை மீனாவின் கணவர் இருதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த நிலையில் கடந்த 6 மாதமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
உறுப்புதானம் பெற முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு, பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டும் துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார், எனக் கூறினார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தின் மூலம், கொரோனா தொற்றினால் மீனாவின் கணவர் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
0
0