வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தராத இந்தியை ஏன் படிக்கனும்..? தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய சதி : பிரபல நடிகை ஆவேசப் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
26 June 2023, 6:06 pm

சமஸ்கிருதம் படித்தால் அர்ச்சகர் வேலை மட்டுமே கிடைக்கும் என்றும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தராத இந்தியை ஏன் படிக்க வேண்டும் எனநடிகை ரோகிணி கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வி.கே.புரம் மூன்று விளக்கு திடல் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக கலை விழா நடைபெற்றது. விழாவிற்கு திரைப்பட நடிகையும், சங்கத்தின் துணை தலைவரான ரோகிணி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விழாவில் பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பின்னர், வி.கே.புரம் பகுதியில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய நடிகை ரோகிணி பேசுகையில், “படித்துவிட்டு வேலையின்றி எத்தனை பேர் இந்தியாவில் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு எந்த மாதிரியான வாய்ப்பு கொடுக்கிறோம் என்பதை யோசிக்காத, மக்களுடைய வாழ்க்கை முறையை பற்றி கவலைப்படாத, ஒரு கல்வி கொள்கை திணிக்கிறார்கள். ஏனென்றால், வேலையாட்கள் வேலையாட்களாவே இருக்க வேண்டும். வசதி வாய்ந்தவர்களின் குழந்தைகள் தான் அதிகாரத்தில் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்பதற்காக தான் இத்திட்டம் உள்ளது. இது வேண்டாம் என ஆரம்பத்திலேயே பேசி இருக்கிறோம். ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை.

சமஸ்கிருதம், இந்தி படிக்க சொல்லுகிறார்கள். ஆனால், சமஸ்கிருதத்தில் படித்தால் அர்ச்சனை செய்யக்கூடிய வேலை மட்டுமே கிடைக்கும். அதற்கும் நமது குழந்தைகளை சேர்ப்பதில்லை. இந்தி படித்தவர்கள் எல்லாம் ஏன் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். அங்கே வேலைவாய்ப்பை ஏற்படுத்தாத இந்தியை நாம் இங்கு படிக்க வேண்டும். மிக முக்கியமாக தமிழகத்தின் மீது பொறாமையில் சுற்றி திரிகின்றனர். ஏனென்றால் நமது குழந்தைகளை முற்போக்கு தனத்துடன் வளர்க்கிறோம். மிகப்பெரிய சதி நடக்கிறது.

தமிழர்களை நாங்கள் தலையில் வைத்துள்ளோம் எனக்கூறி, இங்கிருந்து செங்கோலை கொண்டு செல்கின்றனர். ஆனால், அதற்கெல்லாம் நாம் அசருவது கிடையாது. சட்டமன்ற தேர்தலில் காட்டியாச்சு, நாடாளுமன்ற தேர்தலில் காண்பிக்க போறோம். தென் இந்தியாவில் நம்மால் எதையும் செய்யமுடியவில்லை என மத்தியில் இருப்பவர்களுக்கு பெரிய துர் கனவாக உள்ளது என மத்திய அரசை தாக்கி பரபரப்பாக பேசினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!