தன்னைப் பற்றி அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜு மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏவி ராஜு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான புகார்களை முன்வைத்து வருகிறார். அவர் பேசியுள்ள விஷயங்கள் இணையதளத்தில் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும், தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவின் பெயரை கூறி கூவத்தூர் ரிசாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி அவர் பேசிய விஷயம் மிகப் பெரிய பிரளயத்தையே அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ஏற்படுத்தி இருக்கிறது.
கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய் எம்எல்ஏ வெங்கடாசலம் என்ன கூத்து அடித்தார் என்ன செய்தார். அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியும். நடிகை திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாசலம் அடம்பிடித்தார் என்றும், கர்ணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும் ஏவி ராஜு தெரிவித்துள்ளார்.
வெங்கடாசலம் குடிக்க மாட்டார். ஆனால், பெண்கள் விஷயத்தில் அவர் வீக் என்பதால் அதற்காக நடிகைகளை ஏற்பாடு செய்து பல நடிகைகள் அங்கே வந்தார்கள். சின்ன வயதான திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாசலம் அப்போது அடம் பிடித்தார். இதற்கு ஆதாரத்தை நான் காட்ட முடியாது. இதெல்லாம் நடந்தது இதற்கெல்லாம் ஏற்பாடு செய்ததேஅவர் தான் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அதிமுக நிர்வாகி ஏவி ராஜுவின் இந்தப் பேச்சுக்கு திரைப்பட இயக்குநரும், நடிகருமான சேரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திரைத்துறையினர் பற்றி அவதூறு பேசிய அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல, பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜு மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “தன்னைப் பற்றி அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜு மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கவனம் ஈப்பதற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்கக் கூடிய நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, லியோ படத்தில் நடித்த போது நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.