அவதூறு பேச்சு… 24 மணிநேரம் கெடு விதித்த நடிகை த்ரிஷா ; கடும் கோபத்தில் ஏ.வி. ராஜுக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்..!!!

Author: Babu Lakshmanan
22 February 2024, 12:45 pm

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு, தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த எம்எல்ஏ வெங்கடாசலம், நடிகை திரிஷா தான் வேண்டும் என்று அடம்பிடித்தார் என்றும், நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கர்ணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும் ஏவி ராஜு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முன்னாள் அதிமுக நிர்வாகி ஏவி ராஜுவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் பெப்சி சங்கமும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜு மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். கவனம் ஈப்பதற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்கக் கூடிய நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதனிடையே, தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், த்ரிஷாவை பற்றி பேச தனக்கு தகுதியில்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கிய ஏவி ராஜு மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறாக பேசிய ஏ.வி. ராஜு, 24 மணிநேரத்திற்குள் முன்னணி செய்தி நிறுவனங்கள் மூலமாக நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும் என்றும், ஏ.வி. ராஜுவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

  • director tamizh strory சினிமானா உயிர்…போலீஸ் வேலையை தூக்கி வீசிய பிரபல நடிகர்…ஆதரவு கொடுத்த வெற்றிமாறன்.!
  • Views: - 240

    0

    0