‘படுத்ததுக்கு Proof இருக்கானு கேப்பாரு’ ; நீ வாய மூடூடா… சீமான் கைதாகும் வரை விடமாட்டேன் ; செய்தியாளரை ஆவேசமாக திட்டிய நடிகை விஜயலட்சுமி..!!
Author: Babu Lakshmanan28 August 2023, 2:47 pm
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யும் வரை விடமாட்டேன் என்று நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து விட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனால், சீமானுக்கு ஆதரவாக அவரது கட்சியினர் விஜயலட்சுமியை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் அவர் கூறி வருகிறார்.
ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அவர் தற்கொலை முயற்சியையும் மேற்கொண்டார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
கடந்த சில மாதங்களாக சீமான் விவகாரத்தில் அமைதியாக இருந்து வந்த நடிகை விஜயலட்சுமி, இன்று தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமியுடன் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:- இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வீரலட்சுமி பேசியது:-மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றி விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்து கொண்டார். பெரியார் கொள்கையை பின்பற்றுவதாலும், கிறிஸ்துவர் என்பதாலும் தாலி கட்டும்
பழக்கம் இல்லை என்று சீமான் அப்போது தெரிவித்தார்.
சென்னையில் பிரபாகரன் தலைமையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், அதனால் திருமணம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சீமான் கூறினார், என்றார்.
தொடர்ந்து, எனக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை, இப்போது இங்கே வந்து நிற்கிறேன் எனக் கூறிய நடிகை விஜயலட்சுமி பேசுகையில், “என்னை ஏமாற்றிய சீமானை கைது செய்ய வைக்காமல் விடமாட்டேன். சீமானை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சீமான் கேவலமானவர் தான்.. நான் கை பிடித்ததற்கு Proof இருக்கானு கேப்பாரு… படுத்ததற்கு Proof இருக்கானு கேப்பாரு…. நீங்க கேட்காதிங்க, என நடிகை விஜயலட்சுமி கூறிய போது, யாரும் அப்படி கேட்கவில்லை என்று செய்தியாளர் ஒருவர் கூறிய பதிலுக்கு, “நீ வாயை மூடுடா… நீ ஏன்டா பேசுற… பேசாதடா,” என ஒருமையில் பேசினார் நடிகை விஜயலட்சுமி
பின்பு மீண்டும் பாதியில் பிரஸ் மீட்டில் சண்டை போட்டு புறப்பட்டார்.