உதயநிதியை வரவேற்க முண்டியடித்த நிர்வாகிகள்.. இரு பிரிவுகளாக பிரிந்து மோதல் : போலீசார் முன்னிலையில் சரமாரி அடித்துக்கொண்ட திமுகவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2022, 6:45 pm

கன்னியாகுமரி : பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த உதயநிதியை திமுகவினர் இருபிரிவுகளாக பிரிந்து வரவேற்று மோதிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுக இளைஞரணிச் செயலாருளம், எம்எல்ஏவுமான உதயநிதி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.

அவரை அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட குமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் உதயநிதி, அரசு விருந்தினர் மாளிகைக்குள் சென்றதும் ஒரு பிரிவினர் கதவை அடைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு பிரிவினர் ஆவேசமடைந்த கதவை திறந்து உள்ளே சென்றனர்.

பின்னர் போலீசார் முன்னிலையில் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது.

  • Selvaraghavan Viral Video உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!