அதிமுக 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு : சேலம், மதுரை, திருச்சி, தூத்துக்குடி வேட்பாளர்களின் முழு விபரம்..

Author: Babu Lakshmanan
31 January 2022, 5:45 pm

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம் தேதி நடைபெற இருக்கிறது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மற்றும் இடப்பங்கீட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிஸியாக இருந்து வருகின்றன.

இப்படியிருக்கையில் அதிமுகவுடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்ட நிலையில், அதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருக்கும் போது, கடலூர், விழுப்புரம், தர்மபுரிக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி காட்டினர்.

இந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. சேலம், ஆவடி, திருச்சி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் அதில் இடம்பெற்றுள்ளது. அதனை காண்போம்..

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!