‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிவிட்டு இப்ப ‘கேலோ இந்தியா’-வாம்… சூடு, சொரணை இல்லாத உதயநிதி – நடிகை விந்தியா விமர்சனம்

Author: Babu Lakshmanan
29 January 2024, 10:45 am

திமுக இளைஞரணி மாநாடு பயனுள்ளதாக இல்லை என்றும், அது சர்க்கஸ் மாநாடு என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கிண்டலடித்துள்ளார்.

பழனியில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூத்திஏழாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் இணை செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :- பழனியில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தின் நிற்கிறார். ஆனால் விடியா தி.மு.க. ஆட்சியில் பழனி வியாபாரிகள் ஆண்டியாக நிற்கிறார்கள். நீதிமன்றம் உத்தரவு காரணமாக சாலையோர வியாபாரிகளின் கடைகளை அகற்றிய விடியா திமுக அரசு, அதே நீதிமன்றம் உத்தரவு போட்டும் அமைச்சர் பொன்முடி சிறப்பு பதவி கொடுத்து மேடையில் அமர வைத்து உள்ளது. இப்போது தெரியவில்லையா..? நீதிமன்றம் உத்தரவு.

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றும் அவர் அமைச்சராக தொடர்வார் என்று சொல்கிறார்கள், வரும் வழியில் பழனியில் பல இடங்களில் குப்பைகளாக இருக்கிறது. கேட்டால் சம்பந்தப்பட்ட துறையினர் சுத்தம் செய்யவில்லை என தெரிவிக்கிறார்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும். அப்போது தி.மு.க. உள்பட அனைத்து குப்பைகளையும் நீக்கி தமிழகத்தை சுத்தப்படுத்துவோம்.

சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டை கின்னஸ்ஸோடு ஒப்பிடுகின்றனர். அது கின்னஸ் அல்ல சர்க்கஸ் மாநாடு. மாநாட்டில் தங்களது குடும்பத்தினரை மாறி மாறி வாழ்த்தியது தான் மிச்சம். ‘இந்தி தெரியாது போடா’ என கூறிவிட்டு, தற்போது ‘கேலோ இந்தியா’ என பெயர் வைத்துள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான். அப்போது, திமுக காரங்க கைதட்டி சிரித்தார்கள், உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றாலும் கை தட்டுகிறார்கள். ஜல்லிக்கட்டு தடையை திமுகவும், காங்கிரசும் தான் கொண்டு வந்தது. அப்போதும் திமுக காரர்கள் கைதட்டினார்கள். அப்போதைய அதிமுக தான் ஜல்லிகட்டை போராடி கொண்டு வந்தோம். இப்போது, ஜல்லிக்கட்டு வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல் உதயநிதி அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதும், அரசியல் செய்கிறார்.

இதையும் பார்த்து திமுக காரங்க கை தட்டுகிறார்கள். இப்படி எதுக்கு கை தட்டுறோம் என்றே தெரியாமல் கருணாநதி குடும்பத்திற்கு கை தட்டுறாங்க, இந்த உபிஸ் என விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ” அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எடுத்த முடிவில் திடமாக இருந்தார். கட்சிக்கு சரியில்லையா, அதை ஒதுக்கி வைத்துவிடுவார். அப்படிதான் டி.டி.வி. தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா என அனைவரையும் ஒதுக்கினார். இதுதான் தலைவர்களுக்கான அழகு. எனவே வரும் காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். மீண்டும் ஆட்சி அமைக்கும்,” இவ்வாறு பேசினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்