சாதி வன்முறை தூண்டும் விதமாக சூரியமூர்த்தி பேசிய காணொளி வைரலான நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் கட்சியின் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் கொ.ம.தே.கட்சியே இந்தத் தொகுதியில் போட்டியிட்ட போது, ஏகேபி சின்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றார்.
இந்த முறை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று அவர் வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதனால், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
ஆனால், சூரிய மூர்த்தியை வேட்பாளராக அறிவித்ததற்கு திமுகவினரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்குக் காரணம் சூரியமூர்த்தி, ஜாதி ஆணவக் கொலையை ஆதரித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கட்சியின் நிகழ்ச்சியில் ஒன்றில் அவர் பங்கேற்று பேசியதாவது :- தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வரக்கூடாது. அப்படி வருமானால் அவர்களை மட்டுமல்லாது, அந்த இளைஞர்களின் தாயையும் சேர்த்து கொன்று விடுவோம் என பேசி இருக்கிறார்.
இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரிய மூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…
தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…
This website uses cookies.