டுவிட்டரை அதகளப்படுத்தும் #கண்டாவரச்சொல்லுங்க hastag… திமுகவை பங்கம் செய்யும் அதிமுக..!!!

Author: Babu Lakshmanan
2 February 2024, 7:21 pm

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளிலும், மக்கள் சேவைகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, கட்சிகளின் செயல்பாடுகளை முன்னிறுத்தி சமூகவலைதளங்களில் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, அதிமுக, திமுக மற்றும் பாஜகவினர் X தளத்தில் படு சூட்டிப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், ஒரு நபரையோ அல்லது செயலுக்கோ ஆதரவாகவோ, எதிராகவோ ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்வது வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில், திமுகவினரை விமர்சித்தும், கிண்டலடிக்கும் விதமாகவும், #கண்டாவரச்சொல்லுங்க ஹேஷ்டேக்குகளை அதிமுகவினர் டிரெண்டாக்கி வருகின்றனர்.

AIADMK IT WING தனது பக்கத்தில், “மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த மக்களை மறந்து 5 வருடங்களாக தலைமறைவாக இருக்கும் திமுகவோட 38 MP யகண்டாவரச்சொல்லுங்க,” எனப் பதிவிட்டுள்ளது.

அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தனது X தளப்பதிவில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சந்திசிரிக்க வைத்துவிட்டு ஸ்பெயினில் இன்ப சுற்றுலா மேற்கொண்டுள்ள விடியா அரசின் முதல்வரைக் #கண்டாவரச்சொல்லுங்க ,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக ஆதரவாளர் ஒருவர், “4000 கோடி மழை நீர் வடிகால் திட்டம் என நாமும் போட்டவரை #கண்டாவரச்சொல்லுங்க,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக ஆதரவு X தளப்பக்கம் ஒன்று, “நீட் தேர்வை உறுதியாக ரத்து செய்வோம் என்று சொன்னவங்கள #கண்டாவரச்சொல்லுங்க !!,” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல, திமுகவினரும் அதிமுகவினருக்கு எதிராக #கண்டாவரச்சொல்லுங்க ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 361

    1

    0