எந்த வருத்தமும் இல்லை.. நயினார் நாகேந்திரனால் அதிமுகவுடனான கூட்டணி முறிவா…? அண்ணாமலை வெளியிட்ட பரபரப தகவல்..!!

Author: Babu Lakshmanan
31 January 2022, 2:40 pm

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும், பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.,19ம் தேதி நடக்கிறது. பிப்.,22ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மற்றும் இடப்பங்கீட்டை உறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், அதிமுக – பாஜக இடையிலான இடப்பங்கீட்டில் சமரசம் எட்டப்படாததால், இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி முறிந்துள்ளது. இந்த அறிவிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களின் சந்திப்பில் வெளியிட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது :- தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். அதிமுகவின் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோர் நான் நேசிக்கக் கூடிய தலைவர்கள். கடினமான சூழலிலும் அதிமுகவை ஓபிஎஸ் – ஈபிஎஸ் வழிநடத்தினார்கள். நகர்ப்புற தேர்தலில் தனித்துப் போட்டி என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது தொடரும். தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல. தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம். அதிமுக தலைவர்கள் மீது எந்த வருத்தமும் இல்லை. தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம். நயினார் நாகேந்திரன் கூறிய கருத்திற்கும், அதிமுக அதிக இடங்களை ஒதுக்க மறுத்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை, எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, கூட்டணி முறிவு பற்றி அண்ணாமாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பாரத பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்கள்‌ தலைமையில்‌, அமைந்துள்ள தேசிய ஜனநாயகக்‌ கூட்டணியில்‌, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்‌, மதிப்பிற்குரிய அங்கத்தினராக அங்கம்‌ வகிக்கிறார்கள்‌. பாரத பிரதமரும்‌, பாஜகவின்‌ மூத்த தலைவர்களும்‌, அஇஅஇமுக மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறார்கள்‌. இரண்டு கட்சிக்கும்‌ இடையே உள்ளார்ந்த நட்புணர்வுடன் நல்லுறவுடன்‌ இருக்கிறோம்‌. இந்த நட்புறவும்‌, நல்லுறவும்‌ தேசிய ஜனநாயக கூட்டணி தோழமையும்‌ இப்போதும்‌ தொடர்கிறது, இனியும்‌ தொடரும்‌.

ஆகவே இந்த நல்லுறவை என்றும்‌ தொடர்வோம்‌ என்ற உறுதியினை, அதிமுகவின்‌ ஒருங்கிகணைப்பாளர்‌ அண்ணன்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ அவர்களிடமும்‌, அதிமுகவின்‌ இணை ஒருங்கிணைப்பாளரும்‌ எதிர்க்கட்சித்‌ தலைவருமான
அண்ணன்‌ எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமும்‌, பாரத பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்களின்‌ நல்லாசியுடன்‌ தெரிவித்தோம்‌.

சமீபத்தில்‌ ஒன்பது மாவட்டங்களில்‌ நடைபெற்ற உள்ளாட்‌சி மன்றத்‌ தேர்தல்களில்‌, ஆளும்‌ கட்சியாக திமுக இருந்த போதும்‌, அதிமுக பாஜக கூட்டணி பல இடங்களில்‌ ஆளும்‌ திமுகவின்‌ அத்துமீறல்களை எல்லாம்‌ எதிர்த்து பெருவாரியாக வெற்றி பெற்றது. அந்த வெற்றியும்‌, பெற்ற வாக்குகளும்‌ இரண்டு கட்சித்‌ தொண்டர்களுக்கும்‌ புதிய
உத்வேகத்தை அளித்துள்ளது, என்பதை மறுக்க முடியாது.

பாரதிய ஜனதா கட்சியின்‌ தொண்டர்கள்‌ கட்‌சியை வளர்த்தெடுக்கவும்‌, தாமரை சின்னத்தை இல்லந்தோறும்‌ கொண்டு சேர்க்கவும்‌, உள்ளாட்சித்‌ தேர்தல்களில்‌ பரவலாக அதிக தொகுதியில்‌ போட்டியிட ஆர்வம்‌ காட்டி வருகிறார்கள்‌. ஆகவே, தேசிய ஜனநாயக கூட்டணியில்‌ தொடர்ந்தாலும்‌, இனிவரும்‌ காலங்களில்‌ நாங்கள்‌ இணைந்து செயல்பட முடிவெடுத்து இருந்தாலும்‌, கட்‌சியின்‌ நலன்‌ கருத, தொண்டர்களுக்கு நல்ல வாய்ப்பினை நல்‌ உற்சாகப்‌ படுத்துவதற்காக, பாரதிய ஜனதா கட்சியின்‌ நலன்‌ கருதி, எதிர்வரும்‌ நகர்ப்புற உள்ளாட்‌எித்‌ தேர்தலில்‌
பாரதிய ஜனதா கட்‌சி, தனியாக களம்‌ இறங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?