அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் ; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு… அதிர்ச்சியில் ஓபிஎஸ்!!

Author: Babu Lakshmanan
2 September 2022, 11:43 am

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்ட பிறகு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், இன்று காலை இந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை வெளியிட்டனர். அதில், அதிமுக பொதுக்குழு செல்லாது என தனிநீதிபதி அறிவித்த தீர்ப்புக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வழக்கறிஞர், “சட்ட விதிகளின்படியே பொதுக்குழு கூட்டப்பட்டதாக வாதிட்டோம். அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்பது இனி சட்டப்படி செல்லும்,” எனக்கூறினார்.

அதேவேளையில், நீதிமன்ற தீர்ப்பை இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடும் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  • Tamannaah about Sura film failure அட்டு படம்…நான் நடிச்சு இருக்கவே கூடாது…வன்மத்தை கக்கிய தமன்னா.!
  • Close menu