வீடியோ லீக் பண்ணுடுவோம்-னு மிரட்டலோ…? பாஜகவுக்கு ஊதுகுழலான பிரபல தொலைக்காட்சி ; அதிமுக கடும் விமர்சனம்…!!!

Author: Babu Lakshmanan
26 February 2024, 9:19 pm

நாடாளுமன்ற தேர்தல தொடர்பாக பிரபல செய்தி நிறுவனம் உருவாக்கிய கருத்துருவாக்கத்திற்கு அதிமுக கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுகவின் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- பத்திரிக்கைத் துறையில் ஒரு புதிய மாற்றமாக திரு. பச்சமுத்து அவர்களால் தொடங்கப்பட்ட “புதிய தலைமுறை” நாளிதழ், நாளடைவில் செய்தி தொலைக்காட்சியாகவும் விரிவாக்கம் அடைந்தபோது, மக்களின் குரலாக, நடுநிலையான செய்திகளை, “உண்மை உடனுக்குடன்” என்ற அடிப்படையில் வழங்குவர் என்ற பெரும் நம்பிக்கை இருந்தது.

ஆனால், இன்றைக்கு அவர்கள் அரங்கேற்றியுள்ள போலி கருத்துருவாக்கம், இவர்களும் மோசமான அரசியல் ஊதுகுழல் தான் என்பதை நிரூபித்துள்ளது.

3 சதவீத வாக்குகள் உள்ள பாஜக தங்கள் கூட்டணி கட்சி என்பதால், அதனைக் தூக்கிப் பிடிப்பதற்காக, அதிமுகவின் வாக்குவங்கியை குறைத்துக் காட்ட முனைவது, குறைந்தபட்ச நேர்மையோ, அடிப்படை ஊடக அறமோ அறவும் அற்ற செயல்.

இந்த போலி கருத்துருவாக்கம், வெறும் கூட்டணி தர்மத்திற்காக நிகழ்த்தப்பட்டதா அல்லது அரை நிர்வாண வீடியோ வெளியிடப்படுமென்று யாரேனும் மிரட்டியதால் நிகழ்த்தப்பட்ட ஒன்றா? கல்வி நிறுவனம் வைத்து பல்வேறு பட்டதாரி மாணவர்களை உருவாக்கும் ஒருவர் நிர்வகிக்கும் தொலைக்காட்சி நிகழ்த்தும் இச்செயல், அவருக்கும் அழகல்ல! அவர் கல்லூரிக்கும் அழகல்ல!, என தெரிவித்துள்ளார்.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 271

    0

    0