அதிமுக பிரமுகரை அடித்துக் கொன்ற திமுகவினர்… யாராக இருந்தாலும் சும்மா விடக் கூடாது ; இபிஎஸ் ஆவேசம்…!!
Author: Babu Lakshmanan9 May 2024, 5:55 pm
பெரம்பலூர் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஒன்றியம், வேலூர் கிளைக் கழகச் செயலாளரும், வேலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான சுப்பிரமணியன் அவர்கள், முன்விரோதம் காரணமாக தி.மு.க-வினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
மேலும் படிக்க: இதுக்கெல்லாம் கனிமொழி பெருமை படக்கூடாது… திராவிட மாடல் என்பவர்கள் பொங்கி எழாதது ஏன்..? நாராயணன் திருப்பதி கேள்வி
விடியா திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், காவல் துறையினர் மெத்தனப் போக்கோடு இருக்காமல், இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் யாராக
இருந்தாலும் அவர்கள், சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் தொடர்ந்து விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதார் திரு. சுப்பிரமணியன் அவர்களை இழுந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன், என தெரிவித்துள்ளார்.